புரெவி புயல் காரணமாக மைசூரு – தூத்துக்குடி – மைசூரு சிறப்பு ரயில் மற்றும் சென்னை – தூத்துக்குடி – சென்னை முத்துநகர் அதிவேக சிறப்பு ரயில் மதுரை – தூத்துக்குடி இடையே இரு மார்கத்திலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது – தெற்கு ரயில்வே
1. 02693 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் அதிவேக சிறப்பு ரயில்.
சென்னை எழும்பூரில் இருந்து 03.12.2020 அன்று புறப்படும் ரயில் மதுரை வரை செல்லும். மதுரை – தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
2. 02694 தூத்துக்குடி – சென்னை எழும்பூர் முத்துநகர் அதிவேக சிறப்பு ரயில்.
தூத்துக்குடியில் இருந்து 04.12.2020 அன்று புறப்பட வேண்டிய ரயில் மதுரையில் இருந்து புறப்படும். தூத்துக்குடி – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
3. 06236 மைசூரு – தூத்துக்குடி சிறப்பு ரயில்.
மைசூருவில் இருந்து 03.12.2020 அன்று புறப்படும் ரயில் மதுரை வரை செல்லும். மதுரை – தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
4. 06235 தூத்துக்குடி – மைசூரு சிறப்பு ரயில்.
தூத்துக்குடியில் இருந்து 04.12.2020 அன்று புறப்பட வேண்டிய ரயில் மதுரையில் இருந்து புறப்படும். தூத்துக்குடி – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.