திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பு சார்பில் ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் பயிலும் 3ம் ஆண்டு பி. பி. ஏ. மாணவிகளுக்கு நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் மற்றும் மாணவிகளுக்கு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டறிகை வழங்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாற்றம் அமைப்பின் நிறுவனரும் அகிலஇந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் வணிக ஆட்சியியல் துறைத்தலைவர் முனைவர். சுரேகா ஃபெலிக்ஸ் மற்றும் வணிக ஆட்சியியல் துறை துணைப்பேராசிரியர்முனைவர்.நஜ்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
மேலும் மாணவிகளுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களால் வெளியிடப்பட்ட இயற்கை உரம் குறித்து எடுக்கப்பட்ட மண் குறும்படம் திரையிடப்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிகை வழங்கப்பட்டது .
நிகழ்வில் பேராசியர்கள் திரளான மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.