Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார், மாமியாரை கொல்ல முயன்ற மருமகள்உள்பட 5 பேர் கைது.

0

'- Advertisement -

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார், மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அடுத்த சீனாபுரம். இங்கு சுப்பராயன் தோட்டத்தில் முருகசாமி -அருக்காணி அம்மாள். இந்த தம்பதிக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில் முருகசாமி அவரது மனைவியார் அருக்காணி அம்மாள், மகன் சின்னச்சாமி, மருமகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் முருகசாமி மகன் சின்னச்சாமி, மனைவி லதா மற்றும் குழந்தைகளுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றிருக்கிறார்.

அந்த சமயம் பார்த்து முன்பின் தெரியாத நான்கு பேர் குடிக்கத் தண்ணீர் கேட்பது போல் முருகசாமி வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். அருகே வந்ததும் முருகசாமியையும், அருக்காணி அம்மாளையும் தைல மரக் கட்டைகளை கொண்டு தலையில் அடித்து தாக்கியிருக்கிறார்கள்.

அப்போது சத்தம் போட்ட வீட்டு நாயையும் தலையில் தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த வயதான தம்பதிகள் போட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவும் , இந்த 4 பேரும் தப்பி ஓடியிருக்கிறார்கள்.

இதையடுத்து பலத்த காயமடைந்த முருகசாமியும் அருக்காணியும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தபோது துடுப்பதியில் இருந்து சீனாபுரம் செல்லும் சாலையில் உள்ள முட்புதரில் பதுங்கி இருந்த கவியரசு என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கவியரசு கூட்டாளிகள் சரவணன், சங்கர், பிரசாத், ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட சரவணன் என்பவரின் நண்பராகிய தமிழரசு என்பவருக்கும் அந்த வயதான தம்பதியரின் மருமகள் லதாவிற்கும் கள்ள உறவு இருந்துள்ளது.

இந்த உறவுக்கு மாமனார், மாமியார் இடையூறாக இருப்பதாக நினைத்த லதா, தமிழரசுவுடன் இணைந்து மாமனார் மாமியாரை கொலை செய்துவிட திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

இதையடுத்து தமிழரசுவின் நண்பனான சரவணன் அவரது நண்பர்களான கவியரசு, சங்கர், பிரசாத் ஆகியோர் முருகவேல் ,
அருக்காணி அடித்துக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து சீனாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மருமகள் லதாவை போலீஸார் கைது செய்தனர் .

கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் கள்ளக்காதலன் தமிழரசுவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.