திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமை கவுன்சிலர் கோ.ரமேஷ் தொடங்கி வைத்தார்.
திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் பள்ளியில் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி புணர் வாழ்வியல் மாணவிகள் ,திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் சோழா ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமினை 46 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ் தொடங்கி வைத்தார்.
செயின்ட் மேரிஸ் பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் கண்ணில் சீழ்வடிதல், சதை வளர்ச்சி,கண்ணில் நீர் அழுத்தம், தூரப்பார்வை, குறைவு பார்வை மங்கல் போன்ற கண் நோய்க்கான அனைத்து விதமான சோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டது.

மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உடனே ஜோசப் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சோழா ரோட்டரி கிளப் சார்ந்த தலைவர் வினோத், செயலாளர் வடிவேலு,
ஒருங்கிணைப்பாளர்
அமலசசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.