திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 40) எலக்ரிசன் வேலை செய்து வருகின்றார்.
காது, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலை காலை கடனை கழிக்க ரயில் பாதையில் சென்றபோது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.