Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காதல் திருமணம் செய்த வாலிபருக்கு அடி உதை,ஆஸ்பத்திரியில் அனுமதி.

0

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓனர் காடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் இவரும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பெற்றோர்களுக்கு தெரியவர, இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேந்தமங்கலம் அருகேயுள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

அங்கு இரு வீட்டாரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில் சரி என கூறி ஜோடியை அழைத்து சென்ற பெண்ணின் உறவினர்கள், பிறகு ஜோடியிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அஜித்குமார் தரப்பினர், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உங்கள் பகுதியை சேர்ந்த காவல்துறையிடம் சென்று முறையிடுங்கள் என சாக்கு போக்கு கூறி அனுப்பியுள்ளனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் செய்வதறியாது காதல் ஜோடி காரில் மீண்டும் சேந்தமங்கலம் நோக்கி சென்றிருக்கின்றனர்.

அப்போது அப்பநாயக்கன்பட்டி பகுதியில் காரை மறித்த 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஜோடிகளை பிடித்து காரை அடித்து நொறுக்கியுள்ளனர். அத்தோடு காதல் ஜோடி மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

பெண்ணை மட்டும் அந்த கும்பல் அழைத்து சென்ற நிலையில், காயமடைந்த அஜித்குமார் உட்பட அனைவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.