திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை தந்த மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து சித்தா, அக்குபஞ்சர் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
திருச்சி உறையூர் தியாகராய நகர் நக்கீரன் தெருவில் அமைந்துள்ள தமிழ் ஹெர்பல்ஸ் மையத்தில் இன்று நடைபெற்றது.
இந்த இலவச சித்தா, அக்குபஞ்சர் முகாமினை அகில இந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவரும், தமிழ் ஹெர்பல்ஸ் இயக்குனருமான டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தொடங்கி வைத்து ஏழைகளுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அருகில் டாக்டர் தமிழரசி சுப்பையா பாண்டியன், மருத்துவர்கள் ஜான் ராஜ்குமார், கணேசன் கார்த்திக் ,
மதிக்குமார், கல்பனா,சுமித்ரா, சாய்ராம், ஷீலா,ஜெயந்தி மற்றும் பலர் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

