Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா.மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.

0

'- Advertisement -

தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு. செயலாளருமான வெல்லமண்டி.ந. நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

Ad banner

நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழக முதல்வர், எதிர்கட்சி துணை தலைவர் ஒ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க,

TVK ad

திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம் (எம்.எல்.ஏ) வழிகாட்டுதளின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளாராகவும், தமிழ்நாடு முதலமைச்சாராகவும், தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த “மக்கள் தலைவி” இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் 24.02.2022 வியாழக் கிழமை காலை 10.30 மணி அளவில் திருச்சி, தென்னூர், அ.இ.அ.தி.மு.க. மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவ படத்திற்கு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

அதுசமயம் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட,பகுதி, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி கலை பிரிவு முன்னாள் கோட்டத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.