திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் கோரிக்கை.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு :
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முந்தைய நாள் பிப்ரவரி 18 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு,
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் ஆக செயல்படும் பள்ளிகளுக்கும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பள்ளிகளுக்கும் மாணவர் நலன் கருதி மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்கள் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கோரி
மாநிலப் பொருளாளர் நீலகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இன்று கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.