என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகடமியில்
வேளாண் அலுவலர் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா.
கையூட்டு பெற மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.
திருச்சி கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகெடமி போட்டி தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் படித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் அரசு அதிகாரிகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில் எழுத்துத் தேர்வு நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டிலும் வெற்றி பெற்று வேளாண் அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா,அகடமி அரங்கில் நடந்தது. 38வது வெற்றி விழாவான இந்த நிகழ்ச்சிக்கு அகடமியின் தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.
இதில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் வேளாண் அலுவலர் டாக்டர் ஜி. மாரியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
நான் பல்வேறு தடைகளைத் தாண்டி அக்ரி முடித்துவிட்டு பி.எச்.டி. வரை படித்தேன் . வேளாண் அலுவலர் ஆகவேண்டும் என்று பலமுறை முயன்று பின்னர் முயற்சியைக் கைவிட்ட நிலையில் எனது பேராசிரியர் கடைசியாக 2011ல் வேளாண் அலுவலர் தேர்வு எழுதச் சொன்னார்.அவரது சொல்லுக்கு மதிப்பளித்து மீண்டும் எழுதினேன்.
அப்போது 467 பதவி இடங்களில் 102வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றேன். 100 பவுன் நகையை அணிந்து சென்றாலும் அரசின் அடையாள அட்டைக்கு இருக்கும் மரியாதை இருக்காது. நம்மை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு கூட பச்சை மையில் கையெழுத்து இட இயலாது. ஆனால் அந்த பாக்கியம் நமக்குக் கிடைத்துள்ளது.
இதனை எந்த சூழலிலும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது. உங்களுக்குக் கிடைத்துள்ள துரோணாச்சாரியார் விஜயாலயன் எனக்கு முன்பே அறிமுகமாகி இருந்தால் அதற்கு முன்னதாகவே வேளாண் அலுவலர் ஆகியிருப்பேன் என்றார்.
விழாவில் வேளாண் அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களின் அனுபவங்கள் மற்றும் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். அவர்களின் பெற்றோரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.
பாராட்டு விழாவில் பங்கேற்ற புதிய வேளாண் அலுவலர்கள் அனைவரும் உத்தியோகத்தின் போது கையூட்டு பெற மாட்டோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.
என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி தலைவர் ஆர் விஜயாலயன் சாதித்த மாணவிக்கு பொன்னாடை அணிவித்தார்.