திருச்சி 48-வது வார்டில் பொது மக்களை தேடிச்சென்று உதவக்கூடிய திமுக வேட்பாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு.
திருச்சி 48 வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் கொட்டப்பட்டு தர்மராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சி பொன்மலை ரயில்வே காலனி,
சுப்ரமணியபுரம் இந்திராகாந்தி தெரு, அவ்வையார் தெரு, கென்னடி தெரு, வள்ளுவர் தெரு, ரங்கா நகர், காந்தி தெரு,கருப்பையா தெரு, இளங்கோ தெரு, சுப்ரமணியர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய திருச்சி 48 வது வார்டில் போட்டியிடும் இ.எம்.தர்மராஜ் கட்சி பணியில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர் ஆவார்.
பொதுமக்கள் நலனுக்காக போராடி வந்தவர்.
நலிவடைந்த பொதுமக்களுக்கு கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தனது சொந்த நிதியில் இருந்து அளித்தார்.
பொதுமக்கள் நலனுக்காக கட்சி,மதம்,ஜாதி பாகுபாடு இன்றி அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருபவர்.
இவர் நாற்பத்தி எட்டாவது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பொதுமக்கள் இல்லம் தேடிச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
திருச்சியில் எந்த வார்டில் போட்டியிட்டாலும் வெற்றி பெறக்கூடியவர் கொட்டப்பட்டு தர்மராஜ்.அந்த அளவு யாரிடமும் எளிதாக பழகக்கூடியவர் எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும் இவரை போன்றவர் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பொதுமக்களின் அடிப்படை குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைப்பார் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
இன்று சுப்ரமணியபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று வாக்குகள் சேகரித்தார்.