மாநகராட்சி 45வது வார்டில்
வெற்றி முகத்துடன் அ.ம.மு.க. வேட்பாளர் சாரதா
பிரசாரம்.
திருச்சி மாநகராட்சி 45வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக சாரதா சங்கர் களமிறங்கியுள்ளார்.
ஏற்கனவே மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கருக்கு மக்கள் மத்தியில் நல்ல பரிச்சயம் இருக்கிறது.
இதனால் பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சாரதாவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள்.
ஆகையினால் வெற்றி முகத்துடன் சாரதா காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சாரதாவுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற கட்சியினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
45வது வார்டு வேட்பாளர் எஸ்.சாரதா சங்கர் கூறும்போது,
தற்போதைய தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை கிடையாது. இதனை மக்கள் நன்கு உணர்ந்து உள்ளார்கள்.
ஆகவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் எனக்கு மக்கள் மகத்தான ஆதரவை அளித்து வருகிறார்கள்.
நான் வெற்றி பெற்றால் 45வது வார்டை முதன்மை வார்டு ஆக மாற்றி காட்டுவேன். எனது கணவரை போன்று மக்களுக்கு சேவை செய்து நல்ல பெயர் வாங்குவேன். என் வெற்றி மக்களின் வெற்றியாக இருக்கும்.
உங்களுக்கு உழைக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். பிரஷர் குக்கர் சின்னம் உங்களின் சமையலறையை இலகுவாக்குவதோடு வார்டு மக்களையும் காக்கும்.
தமிழகத்தில் துணிச்சல் மிக்க தலைவராக வலம் வரும் டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்தவும்,பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கவும் பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள் என கூறினார்.