திருச்சி 49வது வார்டின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன் அதிமுக வேட்பாளர் மகாலட்சுமி மலையப்பன்.
திருச்சி மறைமலை அடிகள் தெரு,முதலியார் சத்திரம்,இக்பால் காலனி,ஜீவா நகர் முடுக்குபட்டி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய நாற்பத்தி ஒன்பதாவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி மலையப்பன்
முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் தோறும் சென்று தனக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு வாக்குகள் சேகரித்தார்.
தான் வெற்றி பெற்றால் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து தருவேன், மேலும் வார்டின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன் என மகாலட்சுமி மலையப்பன் கூறினார்.
அவருடன் வட்டச் செயலாளர் மலையப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.