
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் 2022 வாக்குப்பதிவு 66 மண்டல குழு அலுவலர்களுக்கு
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் ப. மு. நெ. முஜிபுர் ரகுமான் தலைமையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் ஆணையர் தெரிவித்ததாவது,
மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் வாக்குப்பதிவிற்காக 859 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
859 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவிற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உட்பட பொருட்களைக் கொண்டு சென்று திரும்ப பெறுவதற்காகவும், வாக்குப் பதிவை முழுமையாக கண்காணித்திடவும் 66 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மண்டல குழுவில் மண்டல அலுவலரிடம் 2 உதவியாளர்களும் இணைந்து பணியாற்றுவார்கள்.
மண்டல அலுவலர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை முன்கூட்டியே பார்வையிட்டு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி மற்றும் மின் இணைப்பு இருக்கைகளில் உள்ளதா என்பதை ஆய்வு செய்திட வேண்டும்.
வாக்குச்சாவடி முன்பாக வாக்குச்சாவடி எண் எழுதப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்து வேண்டும்.
மேலும், வாக்குச் சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு சாய்வு தளம் வசதி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு தொடங்கவுள்ள முதல் நாளான பிப்ரவரி 18-ஆம் தேதி மண்டல அலுவலர்கள் தமது பகுதிக்கான வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு பொருள்களை தலைமையிடத்தில் இருந்து பெற்று வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு அலுவலரிடம் ஒப்படைத்து ஒப்புதல் பெற வேண்டும்.
முன்னதாக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் 100சதவீதம் வருகை புரிந்துள்னரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு நடைபெறும் போது காலை 9 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதம் தலைமை இடத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .
வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உரிய முறையில் சீல் வைக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்து வாக்குச்சாவடிகளில் இருந்து பெறவேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலரிடமிருந்து தவறாது பெற வேண்டும். அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தின் பாதுகாப்பு அறைகளில் ஒப்படைக்கவேண்டும்.
இந்தப்பணிகளை மண்டல குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் நேர்மையான நியாயமான வாக்கு பதிவினை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த பயிற்சி வகுப்பில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பி.சிவபாதம், ப.கமலக்கண்ணன்,
எஸ்.செல்வபாலாஜி,
அ.அக்பர்அலி,
சி.பிரபாகரன், அ.ராஜேஷ்கண்ணா,லோகநாதன்,
கே.பாலசுப்பிரமணியன் மற்றும் செயற்பொறியாளர் ஜி.குமரேசன், உதவி ஆணையர் ச.நா.சண்முகம் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

