நெல்லை திமுக வட்டச்செயலாளர் மணி யாதவ் கொலை. உடனடி நடவடிக்கை எடுக்க பாரத முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பாரதிராஜா யாதவ் வலியுறுத்தல்.
பாரத முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை திமுக வட்ட செயலாளர் அபே மணி யாதவ் கொலையில் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்.
பாளையம்கோட்டை காவல் நிலையம் அருகிலேயே திமுக வட்ட செயலாளர் அபே மணி யாதவ் என்பவர் மர்மக் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக கடுமையாக கண்டனத்தினை தெரிவிக்கின்றோம்.
முழுக்க முழுக்க அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே சகோதரர் அபே மணி யாதவ் கொல்லப்பட்டுள்ளார்.
இக்கொலையில் சம்பந்தப்பட்டோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க
வேண்டுமென காவல்துறையினரை யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் வேண்டுகின்றோம்.
என பாரத முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.