
திருச்சி அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில்
முதியோர்கள்
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் பூரண குணமடைய வேண்டும் என சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வேண்டுதல். 
திருச்சி அனைக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள் அனைவரும் இணைந்து கொரோனா நோய் பாதிக்கப்பட்ட மக்கள் பூரண குணமடைய வேண்டும்

என்றும் நம் நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இல்லாமல் முற்றிலும் மாற வேண்டும் என தைப்பொங்கல் திருநாளில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து முதியவர்கள் அனைவரும் வேண்டி வழிபட்டனர்.

இந்த பொங்கல் விழா ஏற்பாட்டினை அனைக்கும் கரங்கள் நிறுவன இயக்குனர் செந்தில்குமார் சிறப்பாக செய்து இருந்தார்.

