திருச்சி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.உள்ளாட்சித் தேர்தலில் மகேஷ் தலைமையில் முழுமையாக வெற்றி பெற தீர்மானம்.
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பேராசிரியர் அவர்களின் நூறாவது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் செயற்குழுக் கூட்டத்தை தொடர்ந்து
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
வருகின்ற மார்ச் 1-ஆம் தேதிக்குள் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 30% நபர்களை திமுகவில் உறுப்பினர்கள் ஆக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது,
தீர்மானம் 2:
ஒவ்வொரு பூத் கமிட்டியில் மொத்தம் 10 பேர் இடம்பெற செய்ய வேண்டும் வரும் 31-ஆம் தேதிக்குள் பூத் கமிட்டியை அமைத்து மாவட்ட கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தீர்மானம் 3:
30 12 2021 அன்று திருச்சி மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிக்காக வருகைதரும் திமுக தலைவர் தமிழக முதல்வர் அவர்களை திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4:
வரும் உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி வார்டுகள் 34, பேரூராட்சிகள் இரண்டிலும் உள்ள 33, நகராட்சிகள் இரண்டிலும் உள்ள வார்டுகள் 48யும் முழுமையாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் கைப்பற்றுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன்
வண்ணை அரங்கநாதன், என். கோவிந்தராஜன், செந்தில் மற்றும் மாவட்ட ஒன்றிய. நகர, பகுதி,பேரூர் கழக பொறுப்பாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.