Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலிதாவின் நினைவு நாள்:திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை

0

'- Advertisement -

திருச்சி புறநகர் மாவட்டம் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

Ad banner

வருகின்ற 5.12.2021 அன்று முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட

ஒன்றிய கழக, நகர கழக, பகுதி கழக, பேரூர் கழக, வட்ட கழக, கிளை கழக, மற்றும் எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு. சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, கலைப்பிரிவு மற்றும் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், அனைவரும்

தங்கள் பகுதிகளில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திடுமாறும்,

மேலும் ஆங்காங்கே உள்ள ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை செய்திடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

என ப.குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.