Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசியக் கல்லூரியில் இயற்பியல் துறை பேரவை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி தேசியக் கல்லூரியில் இயற்பியல் துறை பேரவை கூட்டம் நடைபெற்றது.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி தேசிய கல்லூரி இயற்பியல் துறை பேரவையின் இரண்டாம் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மதுரை தியாகராசர் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் ஜி. அறிவழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “கணிதம்: இயற்பியல் பயில ஓர் மொழி” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

ஆழமான இயற்பியல் கோட்பாடுகளையும் எளிதாக எடுத்துரைக்க எவ்வாறு கணிதம் ஒரு மொழியாக உதவுகிறது என்பதை சில சான்றுகள் மூலம் விளக்கிக்காட்டினார்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சுந்தரராமன் தலைமை வகித்தார்.

இயற்பியல் துறை தலைவர் முனைவர் எஸ். பாரி மாணவர்களுக்கான சிறப்பு செயற்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.

TVK ad

முனைவர் டி. வி. சுந்தர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

முன்னதாக மாணவர் ஈஸ்வர் கூட்டத்தினரை வரவேற்றார்.

மாணவர் ஹரிப்ரசாத் பரிசு பெற்றோர் பெயர்பட்டியலை அறிவித்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முடிவில் மாணவி குணலக்ஷ்மி நன்றி கூறினார்.

மாணவிகள் ஸ்னேதா, நிவேதிதா மற்றும் ஹரிணி நிகழ்ச்சிகளை தொகுத்து அளித்தனர்.

மாணவர்கள் சந்துரு, நவீன் மற்றும் விக்னேஷ் கூட்ட ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.