தமிழகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.
தமிழகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.
தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூரில் பணியாற்றி வரும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வார்கள் .
வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 50 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் வெளியூர் செல்வோருக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இன்று முதல் நாளை மறுநாள் வரை, சென்னையில் இருந்து 9,806 பஸ்கள்; மற்ற ஊர்களில் இருந்து 6,734 பஸ்கள் என, தமிழகம் முழுதும், 16 ஆயிரத்து, 540 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர், கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்க, ஆறு இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, எந்த ஊருக்கு செல்ல, எந்த பஸ் நிலையம் செல்ல வேண்டும் என்பதை அறிந்து செல்ல வேண்டும்.
இது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பஸ்களில் பயணிக்க 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துஉள்ளனர்.
இது, கடந்த ஆண்டை விட குறைவு. இன்னும் இரண்டு நாட்களில், முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சியில் கூட்ட நெரிசலை தவிர்க்க மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் இன்று முதல் செயல்பட உள்ளது.