Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திருச்சி டைம் கிட்ஸ் மழலையர் பள்ளியில் வித்யாரம்பம் முறையில் குழந்தைகள் சேர்க்கை.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திருச்சி டைம் கிட்ஸ் மழலையர் பள்ளியில் வித்யாரம்பம் முறையில் குழந்தைகள் சேர்க்கை.

0

'- Advertisement -

சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை பொதுவாக பெற்றோர்களிடம் உள்ளது.

Ad banner

இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினம் வரும் வரை காத்திருக்க வைப்பது வழக்கமாக உள்ளது. இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தாண்டு பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது.

சரஸ்வதி பூஜையை
முன்னிட்டு இன்று

திருச்சி ராஜா காலனி மற்றும் புத்தூர் பாரதி நகரில் உள்ள டைம் கிட்ஸ் மழலையர் பள்ளியில்

TVK ad

பள்ளியின் தாளாளர் கற்பக பிரியா தலைமையில் குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில்
அ என தமிழின் முதல் எழுத்தை
குழந்தைகள் நெல்மணி மற்றும் அரிசியில் எழுதினர்.

பெற்றோர்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்தனர்.

அவர்களை ஆசிரியர்கள் அன்போடு வரவேற்று வித்யாரம்பம் எனும் முறையில் இறைவனை துதித்து குழந்தையின் கையை பிடித்து நெற்மணிகளில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ ‘ என்ற எழுத்தை எழுத வைத்து பள்ளியில் சேர்த்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.