திருச்சி நாகநாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழா.அலுவலர்கள் மட்டுமே வழிபாடு.
திருச்சி நாகநாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழா.அலுவலர்கள் மட்டுமே வழிபாடு.
திருச்சி தெப்பக்குளம் நாகநாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழா.
பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.
திருச்சி தெப்பக்குளம் நந்தி கோயில் தெருவில் அமைந்துள்ள நாகநாதசுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நேற்று இரவு நடைபெற்றது. கொரோன ஊரடங்கு காரணமாக குருபெயர்ச்சி சிறப்பு பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜோதிட சாஸ்திரப்படி சுபகிரகமான குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை பயிற்சியை அடுத்த ராசிக்கு செல்வார். இந்த நிகழ்ச்சிக்கு குருபெயர்ச்சி என்று பெயர்.வழக்கமாக குரு பெயர்ச்சி அன்று சிவாலயங்களில் ஹோமங்கள் மற்றும் பரிகார அர்ச்சனை அபிஷேகம் நடைபெறும்.இந்த ஆண்டு நேற்று இரவு 9.48 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயற்சியணர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் வழிகாட்டுதல்படி கோயில்களில் இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட வேண்டும், என்பதால் அதற்கு பிறகு வந்த குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடத்தவும், பக்தர்கள் அதிகளவில் சேர்க்க முடியாத நிலையும் ஏற்பட்டது.தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் பெருமளவிலான பக்தர்கள் பல்வேறு காரணங்களினால் குரு பெயர்ச்சிக்கு கோயிலுக்குச் செல்ல ஆர்வம் கட்டவில்லை. இதனால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு நிரம்பி இருக்கும் தெப்பக்குளம் நாகநாதசுவாமி கோவில் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமான நடை அடைக்கப்பட்டது. பக்தர்கள் இன்றி கோயில் அலுவலர்கள் மட்டும் வழிபாடு நடத்தினர்.