திருச்சியில் நகை பட்டறை உரிமையாளரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
திருச்சியில் நகை பட்டறை உரிமையாளரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
திருச்சி கோட்டை பகுதியில் நகை பட்டறை உரிமையாளர் மீது தாக்குதல்
3 பேர் கைது.

திருச்சி கோட்டை பகுதிக்கு உட்பட்ட இ. பி. ரோடு செல்வவிநாயகர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 26 ). நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று நடராஜன், நண்பர் சிவராமநுடன் அவரது கடை அருகே நடந்து சென்ற போது மூன்று பேர் சேர்ந்து வெடியை கொளுத்தி நடராஜன் மீது வீசியுள்ளனர், இதை நடராஜன் கேட்டபோது 3 பேரும் சேர்ந்து நடராஜனை ஆபாசமாக திட்டியும்,ஒருவர் இரும்பு கம்பியால் தலையில் அடித்தும் மற்ற மூன்று நபர்கள் கையால் கன்னத்தில் அடித்ததாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த நடராஜன், திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் பின்னர் இது தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ரங்கராஜ் ( வயது 19), முகமது ஜாவித் வயது (22), ஆதில் முகமது (வயது 22) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.