Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமூக வலைதளங்களில் வைரலாகும் திருச்சி போக்குவரத்து ஆய்வாளரின சமூக விழிப்புணர்வு பணி.

0

முககவசங்களை அணிந்தால் மட்டுமே கொரோனோ மூன்றாவது அலையை தடுக்க முடியும் என்று நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சமூக அக்கரையோடு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் திருச்சியை சேர்ந்த போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன்

கொரோனோ இரண்டாவது அலையில் இருந்து மக்கள் விடுபெற்றாலும் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என்கிற மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை பொதுமக்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.

இந்நிலையில் அம்மா மாஸ்க் போடுங்க … தம்பி மாஸ்க் போடுங்கள் என்று திருச்சியில் உள்ள ஒவ்வொரு சிக்னல்களிலும் கொரோனோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணனின் செயல் பொது மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

இறுச்சக்கர வாகனங்களில் முககவசங்களை அணியாமல் வருபவர்களுக்கு இலவச முககவசங்களை வழங்குவதோடு நாள்தோறும் 10ற்கும் அதிகமான பேருந்துகளில் ஏறி தன் சக போக்குவரத்து காவலர்களின் உதவியோடு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

திருச்சி மாநகர் முழுவதும் அதிக அளவு கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு முககவசம்,தலைக்கவசம் அணியாதவர்கள் மீது அபதாரம் விதிக்கப்படும் போக்குவரத்து காவலர்கள் மத்தியில், இது போன்று அனைத்து தரப்பு மக்களிடமும் முகம் சுளிக்காமல் தினந்தோறும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்த போக்குவரத்து காவலர்

இவர் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி வரும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.