
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்
சாமி தரிசனம் செய்ய வந்த
பெங்களூரு பக்தர் மயங்கி விழுந்து சாவு
போலீசார் விசாரணை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெங்களூரு பக்தர் திடீரென்று மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கர்நாடகா மாநிலம் பெங்களூரு
போஸ்டல் காலனி 4வது கிராஸ் பகுதி சேர்ந்தவர்
ராமகிருஷ்ணன் (வயது 61) இவர் தனது நண்பர்களுடன் பெங்களூரூரில் இருந்து நேற்று திருச்சி வருகை புரிந்தார். பிறகு திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். தெற்கு உத்தர விதி பகுதியில் தனது நண்பர்களுடன்ராமகிருஷ்ணன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று அவர் மயங்கி விழுந்து உள்ளார். இதையடுத்து அவரை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்த பொழுது ராமகிருஷ்ணன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் . இந்த சம்பவம் குறித்து
அவருடையை மனைவி ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

