திருச்சி மாவட்டத்தில் வருகிற 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க திமுகவினருக்கு வேண்டுகோள் .

திருச்சி மாவட்டத்தில் வருகிற 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க திமுகவினருக்கு வேண்டுகோள் …
திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு, தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் ந. தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளர், கழக தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்த நாளான வருகிற 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட கழகங்களின் சார்பில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழகங்களில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும், பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும், இளைஞர் அணியினர் இரத்த தான முகாம், மருத்துவ முகாம் நடத்தியும், அன்னதானம் வழங்கியும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை வெகு விமரிசையாகவும் எழுச்சியுடனும் சிறப்பாக கொண்டாட வேண்டுமென கழக நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழக செயல்வீரர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

