தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளருக்கு தீபாவளி வாழ்த்து கூறிய முன்னாள் அரசு வழக்கறிஞர்
திருச்சி மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞராகவும்,அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர் வழக்கறிஞர் ஆர்.ராஜ்குமார் இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் களப்பணியாற்றியவர் இவர் சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் செந்திலை சந்தித்து வழக்கறிஞர் ஆர். ராஜகுமார் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்
இந்தநிகழ்வில் தமிழக வெற்றிக்கழகத்தின் முன்னணி நிர்வாகியும்,திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வருமான கருமண்டபம் பி . பத்மநாதன்,தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு உறுப்பினர் டேனியல்,தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி தீரன் மாநகர் தனபால்,புத்தூர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

