திருச்சி வயலுார் முருகன் கோயிலில் வருகிற 10 ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடக்கம் .15 ஆம் தேதி சூரசம்ஹராம் நிகழ்ச்சி
திருச்சி வயலுார் முருகன் கோயிலில் வருகிற 10 ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடக்கம் .15 ஆம் தேதி சூரசம்ஹராம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது ..
திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் 10 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது …
வருகிற 10 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்குகிறது. சிங்கார வேலவர் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிவரை காலை 8 மணிக்கு கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், சுப்பிரமணிய
சுவாமிக்கு 16 ஆம் தேதி வரை தினமும் காலை 11 மணிக்கு சண்முகார்ச்சனைகள், இரவு வள்ளி தேவசேனா சமேத
சுப்பிரமணிய சுவாமி பச்சை மயில், சேஷ, ரிஷப, அன்னம், வெள்ளி மயில், ஆட்டுக்கடா வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது … 6ம் நாளான 15 ஆம் தேதி கந்த சஷ்டி அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி “சக்திவேல்” வாங்கும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு சிங்காரவேலவர் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு (சூரசம்ஹாரம்) அளித்தலும், முத்துக் குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 16 ஆம் தேதி
இரவு 7 மணிக்கு மேல் தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்நடைபெற உள்ளது ..
எந்த முருகன் கோயிவிலும் இல்லாத சூரசம் ஹாரம் வயலூர் முருகன் கோயிலில் தொடர்ந்து 3 நாட்கள் சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞான சேகரன் உத்தரவின்படி, உதவி ஆணையர் சுமதி, கோயில் நிர்வாக அதிகாரி சக்திவேல் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

