த.வெ.க. அரசை கண்டித்து
திருச்சியில் 31ந்தேதி தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழல் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் நாளை மறுநாள் 31-ம் தேதி (சனிக்கிழமை) அன்று திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்த திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை
நடந்து வருவதாகவும், இதனால் சட்டம்-ஒழுங்கு முடங்கிக் கிடப்பதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதோடு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய அரசு நிர்வாகத்தைக் கண்டித்தும்,
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும், சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையும் விண்ணைத் தொட்டு உயர்வதால் இல்லத்தரசிகள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து செயலாளர்களுக்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் உள்ளிட்ட மாவட்ட மகளிர் அணி, தொண்டரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வருகிற 31 ஆம் தேதி நடைபெறும்
ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணியினர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர்.

