Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 8வது வார்டில் மரக்கன்று நடும் குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பொன்மணி தொடங்கி வைத்தார் .

0

'- Advertisement -

மாநகராட்சி மற்றும் சாரதாஸ் நிறுவனம் இணைந்து  திருச்சியில் 8வது வார்டில் மரக்கன்று நடும் குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பொன்மணி தொடங்கி வைத்தார் ..

Ad banner

திருச்சி மாநகராட்சி மற்றும் சாரதாஸ் நிறுவனம் இணைந்து மாநகராட்சி மண்டலம் 5,வார்டு எண் 8 கணபதி நகர் மற்றும் வின்ஸ் அன்பு அவன்யூ ஆகிய இரண்டு பகுதியில் உள்ள 2506 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் 7500 மரக்கன்று நடும் சிறப்பு குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பொன்மணி இன்று தொடங்கி வைத்தார்.

மாநகராட்சிக்கு சொந்தமான கணபதி நகரில் 1450 , வின்ஸ் அன்பு அவன்யூவில் 1150 ஆகிய இரண்டு மொத்தம் 2506 பூங்கவில் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் சிறப்பு குறுங்காடு மரக்கன்று நடும் திட்டம் திருச்சி சாரதாஸ் நிறுவனம் (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ் மொத்தம் 7500 மரக்கன்றுகள் வழங்கினார்கள் . இதில் 26 வகையான நிழல்தரும் மரங்கள், பூக்கும் மரங்கள், பழம்தரும் மரங்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் நடவு செய்யப்பட உள்ளன. நடவு செய்யப்பட்ட அனைத்து மரக்கன்றுகளுக்கும் செட்டு நீர் பாசன வசதி, பாதுகாப்பு வேலி, மற்றும் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வில் உதவி ஆணையர் நித்தியா, நன்கொடையாளர் சாரதாஸ் ரோஷன் மணவாளன் மற்றும் முன்னாள் உதவி. ஆணையர் வைத்தியநாதன், மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.