திருச்சி மனமகிழ் மன்றத்தில் பீர்பாட்டில் குத்து ….கண்டுகொள்ளாத திருச்சி மாவட்ட டாஸ்மார்க் எஸ் ஆர் எம் இராம்பிரதிபன் மற்றும் கலால் துறை அதிகாரிகள் .காரணம் …..
திருச்சி மனமகிழ் மன்றத்தில் பீர்பாட்டில் குத்து ….கண்டுகொள்ளாத திருச்சி மாவட்ட டாஸ்மார்க் எஸ் ஆர் எம் இராம்பிரதிபன் மற்றும் கலால் துறை அதிகாரிகள் காரணம் …..
திருச்சியில் மன மகிழ் மன்ற காசாளர் – மேலாளருக்கு
பீர் பாட்டில் குத்து 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு.
திருச்சி சஞ்சீவி நகரில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றத்தில் மதுப் பானம் வழங்காத ஆத்திரத்தில் டாஸ்மாக் காசாளர்,மேலாளரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூன்று வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் மனமகிழ் மன்றத்துடன் டாஸ்மாக் கடை உள்ளது.இந்த கடையில் காசாளராக பணிபுரிந்து வருபவர் சந்துரு (வயது 24 )இந்நிலையில் இந்த மதுபான கடைக்கு இரவு 11 மணியளவில் மூன்று வாலிபர்கள் வந்தனர்.பிறகு அங்கிருந்த காசாளரிடம் மதுபானம் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் இரவு 11 மணி ஆகிவிட்டது. அதனால் மனமகிழ் மன்றத்தை மூடப் போகிறோம் என்று கூறியுள்ளார். இதையடுத்து
ஆத்திரம் அடைந்த மூன்று வாலிபர்களும் சேர்ந்து காசாளர் சந்துரு மேலாளர் அழகர், மற்றும் ஊழியர் மணிகண்டன் ஆகியோரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து டாஸ்மார்க் மேலாளர் சந்துரு கோட்டை காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த கௌசிக் பாரதி மற்றும் பிரவீன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போன்று பாரதியும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மனமகிழ் மன்றத்தில் மது குடிப்பதில் தகராறு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது மட்டுமில்லாமல் இந்த மனமகிழ் மன்றத்தில் அடிக்கடி இந்தவாறு கத்திக்குத்து மற்றும் அடிதடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறி வருகின்றனர்
இது குறித்து திருச்சி டாஸ்மாக் மண்டல மேலாளர் இராம பிரதீபன் உடனடி நடவடிக்கை எடுப்பாரா இல்லை எப்போதும் போல் வாங்குவது வாங்கிக் கொண்டு கண்டுக்காமல் விடுவாரா ?

