Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கில் போட்டியிட மு.க ஸ்டாலினுககு திராணி உள்ளதா?!திருச்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன்

0

'- Advertisement -

திருச்சி கிழக்கில் போட்டியிட மு.க ஸ்டாலினுககு திராணி உள்ளதா?!திருச்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கேள்வி

Ad banner

தனிப்பெரும் இயக்கம் ஆரம்பித்து, இரண்டே ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் வேட்பாளராக களத்தில் இறங்கி, முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் ஆன வரலாறு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களையே சாரும்.

அறிஞர் அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தில், நெடுஞ்செழியன், அன்பழகன் போன்று எத்தனையோ அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களில் இருந்த பொழுதும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் செல்வாக்கால், திமுக கட்சித் தலைவராக பதவி ஏற்றவர் கருணாநிதி என்பது இந்திய துணை கண்டம் அறியும்.

அதன் பின்னரும் அன்பழகன், நாஞ்சில் மனோகரன் போன்று அனுபவம் வாய்ந்த எத்தனையோ தலைவர்கள் இருந்த பொழுதும், தந்தையார் முதல்வராகவும், கட்சித் தலைவராகவும் இருந்த ஒரே காரணத்தால் செயல் தலைவர் அதன்பின் தலைவர் ஆனவர் மு.க ஸ்டாலின் ஜனநாயக போர்க்களத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே அரசாள முடியும்.

மன்னர் ஆட்சி போல, வாரிசு கோட்டாவில் வந்ததால், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாது, நித்தம் ஒரு அவதூறை அள்ளி வீசும் குறுகிய மனம் படித்தோர் மக்கள் தீர்ப்பை ஏற்க மறுக்கின்றனர்.

 

தங்களது கோபத்தை எங்கு காண்பிப்பது என்று தெரியாமல், மேடை போட்டு, தரம் தாழ்ந்து அநாகரிக பேச்சை ஆயுதமாக கொண்டுள்ளனர்.

தமிழக மக்கள் தங்களை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

அதற்கு ஜனநாயகத்தில் ஒரே வழி , வருகின்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்.

நீங்கள்தான் 75 ஆண்டுகால கட்சியை தலைமை ஏற்று நடத்துபவர் ஆயிற்றே!

கொள்கை கோட்பாடுகளின் ஊற்று நீங்கள்தான் என்று சொந்தமாக வைத்திருக்கும் தொலைக்காட்சிகளில், நித்தம் அறிக்கை விடுபவர் ஆயிற்றே!

திருச்சி திமுகவின் கோட்டை என்று எதிர் கட்சிகளை ஒரு காலத்தில் ஏளனம் செய்து உங்கள் தளபதிகள் கொட்டமடித்ததை உள்ளூர ரசித்தவர் ஆயிற்று!

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த ஒரு அடிப்படை உறுப்பினர் என்கின்ற முறையில் என்னைப் போன்றவர்களின் எண்ணமெல்லாம், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில்மு.க ஸ்டாலின் அவர்கள் போட்டியிட வேண்டும்.

 

தங்களது கொள்கையான அவதூறு பேச்சுக்களை கட்டவிழ்த்து விடும் எதிர்க்கட்சித் தலைவர், உண்மையான போராம், ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்று ஜோசப் விஜய் அவர்களை எதிர்கொள்ளட்டும்.

 

மறுபுறம், மக்கள் தலைவரான முதல்வர் அவர்கள் கை காட்டும் யாரோ ஒரு எளியவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் ..

திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நிரூபிப்பார்கள் மக்களின் மனதை வென்றவர் யார் என்று. திராணி இருந்தால்!! களத்தில் சந்திப்போம் என முன்னாள் திருச்சி மாமன்ற உறுப்பினர் ப. செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.