Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் புதன்கிழமை குடிநீர் விநியோகம் ரத்து .

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் புதன்கிழமை குடிநீர் விநியோகம் ரத்து ….

Ad banner

இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் பொன்மணி அவர்கள் வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பிட்டு தெரிவித்து இருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-I, வெல் III (Aerator) மற்றும் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II (KFW) ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை 13.10.2026 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-I, வெல் III (Aerator) மற்றும் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் -II (KFW) ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர், ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், தில்லைநகர், அண்ணாநகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்க்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான் மலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம் நகர் மற்றும், திருவறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர் விவேகனந்தர் நகர் மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நாளை மறுநாள் புதன்கிழமை (14.10.2026 ) ஒருநாள் இருக்காது.

மறுநாள் வியாழக்கிழமை (15.10.2026 ) முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் நே. பொன்மணி அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.