பழைய நடைமுறையை அமல்படுத்த கோரி திருச்சிகுட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குட்செட்டில் 24 மணி நேர வேலை உத்தரவை ரத்து செய்து, காலை 6மணி முதல் மாலை 6மணி வரை மட்டுமே வேலை என்ற பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
ஜிசிடி, பிஎப்டி அல்டர்நெட் குட்செட் போன்ற குட்செட் தனியார்மய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் இஎஸ்ஐ, பிஎப் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். குடிநீர், ஓய்வறை, குளியலறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், லாரி எடை மேடையையும் அமைத்துத் தர வேண்டும்.
சரக்குகளைப் பாதுகாக்க மதுரை மற்றும் தாமரைப்பாடியைப் போல சைடிங் குடோன் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதையும், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களைக் காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் முற்றுகையிட்டதையும் கண்டித்தும்
திருச்சி ரயில்வே குட்செட் பாரம் சுமக்கும் தொழிலாளர் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் இன்று திங்கள்கிழமை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் மணிமாறன், சுமைப்பணி சங்கம் மாவட்ட பொருளாளர் ஸ்டாலின், குட்செட் பாரம் சுமக்கும் தொழிலாளர் சங்க தலைவர் சேகர், செயலாளர் வீரபாண்டி ஆகியோர் பேசினர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

