திருச்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நகர அலுவலர் தலைமையில் நடைபெற்றது
திருச்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நகர அலுவலர் தலைமையில் நடைபெற்றது
திருச்சி மாநகராட்சி ஆணையர் பொன்மணி அறிவுறுத்தலின்படி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, டெங்கு புதர் காய்ச்சல், லெப்ட்ஸ்ப்பிரோசிஸ் நோய்களை தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கான பணியிடை பயிற்சி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாநகர நல அலுவலர் மரு. கார்த்திகேயன் தலைமையில் தேவர்ஹாலில் நடைபெற்றது.
மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர். மதிவாணன், மாவட்ட மலேரியா அலுவலர் முருகேசன் ஆகியோர் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கினர் .
வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெங்கு லெப்ட்ஸ்ப்பிரோசிஸ் நோய்களை தடுக்கும் வகையில் எடுக்க பட்டிருக்கும் நடவடிக்கை குறித்த ஆய்வு மற்றும் புத்துணர்வு பயிற்சியில் பணியின் முக்கியத்துவம், கண்கணிப்பு, செய்ய வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.காலி மனை, பூட்டியக் வீடு, கட்டுமான பணிகள் நடை பெரும் இடங்களில் தனி கவனம் செலுத்தவும் காய்ச்சல் கண்கணிப்பு தீவிரப்படுத்தவும் அறிவுறுத்த பட்டது.
மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் கட்டுமான இடங்களுக்கு நேரடியாகச் சென்று கொசு உற்பத்தியாகும் ஆதாரங்கள், பாத்திரங்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள் மற்றும் கொசு புழு உண்டாக காரணமாக இருக்கும் பொருட்களை கண்டறிந்து அழிக்க வேண்டும்.
நீர்நிலைகளில் கொசுப் புழுக்களை அழிக்கும் மருந்துகளைத் தெளிக்கவும், அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணிகளை தீவிரப்படுத்தவும் வேண்டும். பொதுமக்களுக்கு டெங்கு கொசு குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்கள் .
பின்னர் சிறப்பாக பணி செய்யத கொசு ஒழிப்பு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசும் வழங்கபட்டது.
ஆலோசனை கூட்டத்தில் சுகாதார அலுவலர்கள், சுகதார ஆய்வாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் பங்கேற்றனர் .

