தஞ்சாவூர் மாவட்டத்தில் ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடத்திய திமுக பிரமுகர், இதேபோன்று திருச்சியில் ஸ்பா மற்றும் விபச்சார விடுதி நடத்தி வரும் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் லாட்ஜ்கள் மற்றும் ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசியப் புகார்களின் அடிப்படையில், எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் கும்பகோணம் மேற்கு மற்றும் மகளிர் போலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளரான ராஜாரகுபதி என்பவருக்குச் சொந்தமான நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் உள்ள ‘பைவ் ஸ்டார்’ லாட்ஜில் சோதனை நடத்தியபோது, அங்கு சட்டவிரோதமாகப் பாலியல் தொழில் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டனர். இதேபோல் சாரங்கபாணி தெற்கு வீதியில் உள்ள ‘கலர்ஸ்’ என்ற அழகு நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வடமாநிலப் பெண்கள் உட்பட 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார், மீட்கப்பட்ட 10 பெண்களையும் திருச்சி அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாட்ஜ் ஊழியர்களான மணிகண்டன் (வயது 34), மகேஷ் (வயது 50) மற்றும் ஸ்பா மேனேஜரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டால் தாக்கூர் (வயது 36) ஆகிய 3 பேரைக் கைது செய்த போலிஸார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். திமுக பிரமுகரின் லாட்ஜில் பாலியல் தொழில் அம்பலமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதே போன்று ஆளுங்கட்சியின் ஆசியுடன் திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் ஒருவர் திருச்சி கருமண்டபத்தில் ஸ்பா என்ற பெயரிலும் மற்றொருவர் திருச்சி எஸ் ஆர் சி காலேஜ் எதிரில் விபச்சார விடுதியும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .

