Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட புங்கனூரில் சந்து கடைகளில் சரக்குகள் தாராளம் கண்டுகொள்ளாத காவல்துறையினர்.

0

'- Advertisement -

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட புங்கனூரில் சந்து கடைகளில் சரக்குகள் தாராளம் கண்டுகொள்ளாத காவல்துறையினர்.

 

Ad banner

திருச்சி சோமரசம்பேட்டை காவல் சலாகத்திற்குட்பட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்லித்துறை பகுதியில் சந்து கடையில் சுமார் 370 க்கும் மேற்பட்ட மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்ததாக சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் இருவரை கைது செய்தனர். மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில் புங்கனூரில் தட்டுப்பாடு இன்றி 24 மணி நேரமும் சந்து கடை வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது என அப்பகுதி பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர். இதுகுறித்து சோமராசம்பேட்டை காவல் நிலைய போலீசார் தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் .

இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு மதுபான கடைகள் 3 மணிக்கு மூடப்பட்டதால் புங்கனூரில் சந்து கடை வியாபாரம் படுஜோராக நடைபெற்றதாகவும்,அதனை காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாற்றி உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.