திருச்சியில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வனத்துறை அதிகாரிக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கினார் நீதிபதி கிறிஸ்டோபர் .
மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட திருச்சியில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வனத்துறை அதிகாரிக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கினார் நீதிபதி கிறிஸ்டோபர் .
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று (சனிக்கிழமை) ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். 3வது சார்பு நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலை வகித்தார். மேலும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன்,வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வக்கீல் முத்துமாரி,நகர வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொருளாளர் சுதர்சன்,
குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் செயலாளர் பி.வி வெங்கட், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சத்திய குமார் (வயது 46) இவர் 2018ல் நடந்த வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளை சென்றபோது வேன் மோதி படுகாயம் அடைந்து ஹோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இது தொடர்பான வழக்கு
திருச்சி 3-வது மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. 
இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் சி.முத்து மாரி, சுதர்சன் ஆகியோர் ஆஜராகி வந்தனர் இந்த நிலையில் இன்று அந்த வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டது. அதன்படி காப்பீட்டு நிறுவனம் சார்பில் ரூ.2 கோடி காசோலையினை மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர், அவரது மனைவி தனலட்சுமியிடம் வழங்கினார். காப்பீட்டு நிறுவனம் சார்பில் தீனதயாளன், நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

