திருச்சியில் தேவாலயத்துக்குச் சென்ற இளம் பெண் மாயம்
திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சந்தியாகு. இவரது 25 வயது மகள் அங்குள்ள தேவாலயத்துக்கு செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்று உள்ளார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை , அவரது குடும்பத்தினர்தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர், ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து ஆரோக்கிய சந்தியாக்கு பாலக்கரை காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று தில்லை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 19 வயது இளம்பெண் மாயமானார். 
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது 19 வயது மகள் மணப்பாறையில் உள்ள பருத்தி மில்லில் வேலை பார்த்து வந்தார் கடந்த 28-ந் தேதி தனது பாட்டியின் இறுதிச்சடங்குக்கு ஊருக்கு வந்தார். பின்னர் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். இதை பற்றி அவரது தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

