Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளத்தை ஒரு லட்சமாக ஏற்றினாலும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள்.67 பேர் சஸ்பெண்ட் செய்தும் திருச்சி (கடை எண் 10211) ஊழியரின் அடாவடி வசூல்

0

'- Advertisement -

சமீபத்தில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.குறிப்பாக டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டுக்குழு சார்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது ..மானிய கோரிக்கை இரண்டு நாட்கள் முன்பு கூட தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர் ஆனால் தமிழ்நாட்டின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை (டாஸ்மாக்) அமைச்சரான கே.விக்னேஷ் மானிய கோரிக்கை அன்று தங்களுக்கு நல்ல தகவல் வரும் அதுவரை பொறுத்திருங்கள் என கேட்டுக்கொண்டதன் பேரில் அப்ப போராட்டம் கைவிடப்பட்டது .அதேபோன்று மானிய கோரிக்கை அன்று சட்டசபையில் டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுடன் பல்வேறு சலுகைகளை அறிவித்து இருந்தார் .அதன் விவரம்

Ad banner

(மேற்பார்வையாளர் (Supervisor): ₹33,023 (முந்தைய ஊதியம்: ₹22,313) விற்பனையாளர் (Salesman): ₹30,284 (முந்தைய ஊதியம்: ₹19,413)உதவி விற்பனையாளர் (Assistant Salesman): ₹28,680 (முந்தைய ஊதியம்: ₹17,925)மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் சட்டமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.கூடுதல் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள்:பண்டிகை முன்பணம்: அனைத்து பணியாளர்களுக்கும் பண்டிகை முன்பணமாக ₹20,000 வழங்கப்படும்.சீருடைப் படி: ஆண்டுதோறும் 3 ஜோடி சீருடைகள் தைப்பதற்கான செலவாக ₹6,000 அறிவிக்கப்பட்டுள்ளது.பணி நேரம் மற்றும் விடுப்பு: சுழற்சி முறையில் 8 மணி நேர வேலை, வாராந்திர விடுமுறை மற்றும் மாதத்திற்கு 2 நாட்கள் ஊதியத்துடன்கூடிய தற்செயல் விடுப்பு (Casual Leave) வழங்கப்படும்.பராமரிப்பு நிதி: கடைகளின் தூய்மை மற்றும் அடிப்படை வசதிக்காக மாதந்தோறும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ₹5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு ₹4,000, மற்றும் கிராமப்புறக் கடைகளுக்கு ₹3,000 வழங்கப்படும்.பதவி உயர்வு: தகுதியான 250 டாஸ்மாக் ஊழியர்கள் அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

குறிப்பு: நுகர்வோர்களிடம் MRP விலையை விட கூடுதலாகப் பணம் வசூலிப்பதைத் தடுக்கும் கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் முதல் முறை 3 மாத சஸ்பெண்ட் மற்றும் அடுத்த முறை பணிநீக்கம் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது …

 

11 ஆயிரம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது மது பிரியர்களிடம் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் பத்து ரூபாய் அதிகம் வசூல் செய்யக்கூடாது என்பதற்காக தான் என அமைச்சர் தரப்பில் விளக்கமும் கூறப்பட்டிருந்தது,ஆனால் அது எல்லாம் காற்றோடு சென்றுவிட்டது,திருச்சியில் இன்றுவரை தொடர்ந்து ஐந்து ரூபாய் மற்றும் பத்து ரூபாய் வசூலிக்கப்பட்டு தான் வருகிறது …பத்து ரூபாய் அதிகம் கொடுத்தாலும் கேட்கும் பிராண்ட் கிடைக்கிறது இல்லை கடையில் இருப்பதை தான் வாங்கி குடிக்க வேண்டும் …திருச்சி பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள எலைட் கடை எண் . 10211 ல் நேற்று மது வாங்க சென்றபோது ஆப் பிராந்தி ஒரே பிராண்ட் 640 ரூபாய் விஸ்கியும் ஒரு பிராண்ட் மட்டும் தான் உள்ளது 540 வேண்டுமென்றால் வாங்கவும் வாங்கவில்லை சென்றுவிடுங்கள் என கூறினார் அந்த சேல்ஸ்மேன் ,இருந்தாலும் அந்த மது பிரியர் 3 கிலோமீட்டர் செல்ல வேண்டுமே என கருதி கோல்ட் ரிசர்வ் என்ற பிராந்தியை ரூ.640 கொடுத்து வாங்கி சென்று பார்த்த போது பாட்டிலில் ரூ . 620 என்றும் +ஸ்டிக்கர் 10 = ௹.630 தான் ஆனால் 10211 கடை சேல்ஸ்மேன் வாங்கியது ரூபாய் 640 .

 

இதற்கு முன்பு டாஸ்மாக் ஜிஎம் மற்றும் எஸ் ஆர் எம் ஆகியோருக்கு எக்ஸ்ட்ரா வாங்குவதில் பாட்டிலுக்கு ஒரு ரூபாய் கணக்கு செய்து கொடுக்க வேண்டும் என கூறினார்கள்,ஆனால் தற்போது உள்ள அதிகாரிகள் பணம் வாங்குவதில்லை என கூறப்படுகிறது,ஆனால் இவர்கள் தைரியமாக பாட்டிலுக்கு எக்ஸ்ட்ரா ரூ.10 வாங்குவதை பார்த்தால் அந்த அதிகாரிகளும் பணம் கேட்டு வாங்குவார்கள் போலிருக்கிறது என மது பிரியர்கள் தெரிவித்து உள்ளனர் ..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.