
திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை கடுமையாக தாக்கிய பிரபல ரவுடி .
திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் (வயது 36). இவர் திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவன குடோனில் வேலை பார்த்து வருகிறார். இதே குடோனில் திருச்சி பெரிய கருப்பூர் குடி தெரு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி குணசேகரனின் மனைவி தீபிகா அங்கு பணியாற்றி வருகிறார். அப்போது லோடு இறக்கி கொண்டிருந்தபோது ஒரு பார்சல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பட்டுள்ளது .. இதைப் பார்த்த ரவுடி குணசேகரனின் மனைவி சிரித்துள்ளார் . அப்போது வசந்த் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது . உடனே தீபிகா தனது கணவரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி குணசேகரன் தனது நண்பர் சதீஷ்குமார் என்பவருடன் சென்று குடோனுக்குள் புகுந்து மரக்கட்டையால் வசந்தை தாக்கி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளனர். 
பின்னர் இது குறித்து வசந்த் கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

