சிந்தாமணி பகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆலோசனைகள் வழங்கினார்
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, மேல சிந்தாமணி யோகா டவரில், சிந்தாமணி பகுதி செயலாளர் வி.பி.எஸ். மகாதேவன் முன்னிலையில் நடைபெற்ற, சிந்தாமணி பகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டக் செயலாளரும், முன்னாள் மாவட்ட ஆவின் தலைவருமான பொறியாளர் சி. கார்த்திகேயன் ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கே.டி. தங்கராஜ், மாவட்ட கழக துணைச் செயலாளர் வெல்லமண்டி ஜி.சண்முகம், மாவட்ட கழக பொருளாளர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கழக பொதுக்குழு உறுப்பினர் அப்பாகுட்டி (எ) அப்துல் ரகுமான், பகுதி செயலாளர் டி.சுரேஷ்குப்தா, வட்ட செயலாளர்கள் ரமணி(எ)லால், குவைத் மனோகரன், ஜாபர் உசேன், பஸ் டாண்ட் வி.ராஜ், வி.ஸ்ரீதர்ப்பிள்ளை, மலைக்கோட்டை ஜெகதீசன், முன்னாள் அரசு வழக்கறிஞர் என்.ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

