ஆசிரியரிடம் ரூ.10,000/- லஞ்சம் பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் கண்காணிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருச்சி சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு ..
பட்டதாரி ஆசிரியரிடம் ரூ.10,000/- லஞ்சம் பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் கண்காணிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு ..
ப.கண்ணன், பட்டதாரி ஆசிரியர், அரசு(ஆ.தி.ந.) உயர்நிலைப் பள்ளி, பாலகிருஷ்ணம்பட்டி, துறையூர் வட்டம், திருச்சி மாவட்டம் என்பவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருந்து மருத்துவ விடுப்பு முடித்து பணியிடை நீக்கம் செய்யாமல் மீண்டும் பணியில் சேர ஆணை வழங்க ஏற்பாடு செய்து தர ரூ.10000/- கையூட்டாக கேட்டது தொடர்பாக திருச்சி மாவட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .தேவதாஸ் ஆகியோர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி ஊ.த.க பிரிவில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கொண்ட குறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் கண்ணனிடம் கையூட்டு பணம் ரூ.10,000/-ஐ கேட்டு பெற்ற போது எதிரிகள் இருவரும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டானர். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணை முடிவுற்று இன்று வெள்ளிக்கிழமை 28.08.2026 திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு அவர்கள், சந்திரசேகரன் மற்றும் தேவதாஸ் ஆகியோர் கண்ணன் என்பவர் மருத்துவ விடுப்பு முடித்து மீண்டும் பணியில் சேர ஆணை வழங்க ஏற்பாடு செய்ய கையூட்டு கேட்டு பெற்ற குற்றத்திற்காக இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார். மேற்படி வழக்கினை சேவியர் ராணி, காவல் ஆய்வாளர், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன் அவர்கள் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.

