Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தினமும் ஒரு லட்சம் இல்லாமல் வீடு திரும்பாத திருச்சி மாநகராட்சி AEE செந்தில் பாஸ்கர் மீது பாலியல் புகாரும் உண்டு

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி பிளானிங் செக்சனில் உதவி செயற்பொறியாளரராக (AEE) இருப்பவர் செந்தில்பாஸ்கர்.சில மாதங்களுக்கு முன் இவருடைய கையெழுத்து அத்தாரிட்டியை நிப்பாட்டி வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மேயர் அன்பழகன் மூலமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பல லட்சங்களை கொடுத்து ஐந்து மண்டலத்துக்கும் கையெழுத்து அத்தாரிட்டியை பெற்று விட்டாராம் செந்தில் பாஸ்கர். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் EE கலைவாணி பெயரைக் கூறி செந்தில்பாஸ்கர் அதிகம் லஞ்சம் கேட்பாராம். இதனால் திருச்சி மாநகராட்சியில் அதிகம் லஞ்சம் வாங்குவது யார் என்கிற போட்டி இருவருக்கும் நிலவுவது போல் காட்டிக்கொண்டு இவர் தினமும் ஒரு லட்சம் வரை பணம் பெற்று வருகிறார் என கூறப்படுகிறது, EE அல்லது AEE யார் முதலில் இன்ஸ்பெக்சன் செல்வது என்பதில் ஏற்பட்ட போட்டியில் செந்தில்பாஸ்கர் முன்னிலை வகித்து வருகிறார். இவர் கையெழுத்து அத்தாரிட்டி வாங்கியதில் மாநகாரட்சி மற்ற அதிகாரிகள் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறதாம். அதேபோல் செந்தில்பாஸ்கர் கீழே வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கும் மறைமுக பாலியல் டார்ச்சர் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.இவருக்கு என தனியாக அரசு ஒதுக்கிய ஜீப் இருந்தும் தனது இருசக்கர வாகனத்தில் அந்த பெண் ஊழியர்களை ஆய்வுக்கு அழைத்து செல்வதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருகிறாராம் . இதை யாரிடம் சொல்லி அழுவது என்கிற வேதனையில் அந்த பெண் ஊழியர்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்அந்த இரண்டு பெண் ஊழியரில் ஒருவர் மாற்றுத்திறனாளி எனவும் கூறப்படுகிறது. ஆகையால் இந்த AEE செந்தில் பாஸ்கர் திருச்சி மாநகராட்சியில் பணிபுரிவது அவ்வளவு நல்லதல்ல என்கிற கருத்தும் மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. சிறிய அளவிலான லஞ்சம் பெற்ற அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பல லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெரிய தலைகள் (செந்தில் பாஸ்கர் ) மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Ad banner

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.