திருச்சி கே.கே. நகரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
Case registered against a person in Trichy's K.K. Nagar for swindling ₹8 lakh under the pretext of securing a job abroad.
திருச்சி கே.கே. நகரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என். ரெங்கராஜ் (வயது 36). இவர் வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் திருச்சி கே கே நகரில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சி நிறுவனம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்புவதாக அறிந்து இங்கு வந்துள்ளார், பின்னர் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுபேஷ் நாராயணன் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் வெளிநாடு செல்வதற்காக ரங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மாதவராஜ், மாரியப்பன் ஆகியோர் ரூபாய். 7,78,500 பணத்தை கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் கொடுத்து உள்ளனர் . அதன் பின்னர் சுபாஷ் நாராயணன் வெளிநாடு செல்ல எந்த ஏற்பாடும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ரங்கராஜ் சுபேஷ் நாராயணனிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு உள்ளார்
ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்து உள்ளார், அதைத் தொடர்ந்து ரங்கராஜ் திருச்சி கே.கே.நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார், அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரி சுபேஷ் நாராயணன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

