Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா தியேட்டர் ஊழியரை கல்லால் தாக்கிய 2 பேர் கைது . பங்களாதேஷ் வாலிபர் உட்பட 3 வாலிபர்களுக்கு வலை ..

0

'- Advertisement -

திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா தியேட்டர் ஊழியரை கல்லால் தாக்கிய 2 பேர் கைது . பங்களாதேஷ் வாலிபர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு..

Ad banner

திருச்சி திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா இவரது மகன் பவித்ரன் (வயது 19) இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர் மனோகரனுக்கு சொந்தமான வெங்கடேஸ்வரா தியேட்டரில் ஊழியராக பணியாற்றி வந்தார்.சம்பவத்தன்று

அவர் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குத்  திரும்பிய போது  நடு கொண்டையம் பேட்டை பகுதியில் உள்ள ஒரு குளிர்பான கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திருவானைக்கோவில் காக்கூர் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் பங்களாதேஷைச் சேர்ந்த மணிஷ் ஆகிய இரண்டு பேரும் வேண்டுமென்றே பவித்ரனின் தலையில் தட்டினார்கள், அதன்பின் பவித்ரன் அந்த இடத்தை விட்டுச் சென்றார். மீண்டும் பவித்ரன் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது குற்றம் சாட்டப்பட்ட  ஸ்ரீதர் மனிஷ மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீராம் (வயது 21 ) ராஜி என்கிற ராஜ்குமார் (வயது 23) ஹரிஷ் ஆகிய ஐந்து பேரும் பவித்ரனை அருவருப்பான வார்த்தைகளால் திட்டி, உதைத்து, கல்லால் தாக்கினர். இதைப் பார்த்து அவரது சகோதரி அவர்களை தட்டி கேட்டார்.அவர்கள் அவரைத் திட்டி, அவரது கையைப் பிடித்து இழுத்து, கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளனர். பவித்ரன் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் ஸ்ரீராம், ராஜி என்கிற ராஜ்குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர் . மற்ற மூவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.