Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .

0

'- Advertisement -

ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .

Ad banner

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி ரயில் நிலையம் வரை ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு திருச்சி வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிரடி சோதனை நடத்தினர் . அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா குட்கா உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா என சோதனை செய்த போது பொதுப்பெட்டியில் சாம்பல் கலர் சாக்கு ஒன்று கேட்பாரற்று கிடந்தது அதை பரிசோதித்த போது அதில் 11 கிலோ குட்கா இருப்பது கண்டறியப்பட்டது . பின்னர் அதை கைப்பற்றி போலீசார் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அந்த குட்காவை கடத்தி வந்தது வெளி மாநிலத்தவர்களா ?அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மை கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.