திருச்சி மணல் க்ரௌவுண்ட் அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சுதந்திர தின விழா கொண்டாட்டம் ..
இந்தியத் திருநாட்டின் 80 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி,தென்னூர், காமராஜ் நகர் பகுதியில் மணல் க்ரெளவுண்ட் அறக்கட்டளை மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து தேசியக்கொடி ஏற்றி கொண்டாடினர். தேசியக்கொடியினை சமூக ஆர்வலர் நாகு முருகேசன் ஏற்றினார்.
விழாவில் 100 மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் , பென்சில்,ஷார்ப்னர்,ரப்பர், ஸ்கேல் அடங்கியத் தொகுப்பு மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக கோபால வீரமணி,மலர் வள்ளி, நாகஜோதி, முருகன், வள்ளி,பாண்டீஸ்வரி, I.ஷாயிதா,அம்சத் பேகம் மற்றும் சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவை அறக்கட்டளையினர் கோபிநாத்,கிருஷ்ணகுமார்,தெளபிக்,முத்து, மோனிஷ்,சுரேஷ்,ரகுமான் மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

