திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் கடையில் திருட்டு .
திருச்சி ராஜா காலனி, லாசன்ஸ் ரோட்டில் மருத்துவ உபகரணக் கடை வைத்து இருப்பவர் அருண் (வயது 43) சம்பவத்தன்று இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 
இந்நிலையில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். மறுநாள் கடையைப் திறக்க வந்த அருண் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 37 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி மற்றும் ரூபாய் 20,000 ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலிஸாரிடம் அருண் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகப்பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

