திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டையில் தொழிலாளி கடன் தொல்லையால் தற்கொலை .
திருச்சி மாட்டோம் தாத்தையங்கார் பேட்டை வடக்கு ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (வயது 53 ) கூலித் தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர்
அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் குடிப்பதற்காக பணம் கடனாக வாங்கியுள்ளார். பின்னர் அவரால் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த பசுபதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென ஃபேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.
கோவிலுக்கு சென்ற அவரது மனைவி காராயி வீடு திரும்பிய போது கணவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது குறித்து தாத்தையங்கார் பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது,அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

